கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் ; இரண்டு துண்டாக உடைந்த கிறிஸ் கெய்லின் பேட்

0 3319
இரண்டு துண்டாக உடைந்த கிறிஸ் கெய்லின் பேட்

கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியின் போது பேட்டிங் செய்துகொண்டிருந்த கிறிஸ் கெய்லின் பேட் இரண்டு துண்டாக முறிந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் Guyana Amazon Warriors அணியும், St Kitts and Nevis Patriots அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த Warriors அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய Nevis Patriots அணி 17.5 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக Evin Lewis 77 ரன்களும், கிறிஸ் கெய்ல் 42 ரன்களும் எடுத்தனர். முன்னதாக ஓடியன் ஸ்மித் வீசிய நான்காவது ஓவரில், கிறிஸ் கெய்லின் பேட் இரண்டு துண்டாக முறிந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments