ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்; மாநில தேர்தல் ஆணையம்

0 3802

9 மாவட்டங்களில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி  தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 24 மணி நேரம் இயங்கும் புகார் மையத்தின் மூன்று இலவச தொலைபேசி  எண்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெறும் தற்செயல் தேர்தல்கள் நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது புகார்களை,1800 425 7072,1800 425 7073 மற்றும்1800 425 7074 ஆகிய கட்டணமில்லா எண்களில் தெரிவிக்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments