நாளை முதல் சுற்றுலா தலங்களை திறக்கிறது மலேசியா
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் முயற்சியதாக, தனது முக்கிய சுற்றுலாத் தலங்களை மலேசியா திறக்க உள்ளது. அதன் முதல்படியாக முக்கிய சர்வதேச சுற்றுலா மையமான லங்காவி நாளை சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்ட உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு அங்கு அனுமதி வழங்கப்படும். பக்கத்து நாடான தாய்லாந்து,தனது புகழ்பெற்ற சுற்றுலா தலமான புக்கெட் தீவை கடந்த ஜூலை மாதமே திறந்து விட்டது.
Comments