டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் முதல் முறையாக உருவாகும் தலைமைச் செயல் அதிகாரி பதவி
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் முதல் முறையாக தலைமைச் செயல் அதிகாரி பதவி ஏற்படுத்தப்பட உள்ளது. 153 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்ட டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் தலைவர் பதவியே மேலானதாக உள்ளது.
இந்நிலையில் நிறுவனத்தின் வணிகத்துக்கு வழிகாட்டும் வகையில் தலைமைச் செயல் அதிகாரி ஒருவரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டப்படி நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தலைமைச் செயல் அதிகாரி வழிநடத்துவார் என்றும், பங்குதாரர்கள் சார்பில் அவரைத் தலைவர் மேற்பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது.
Comments