ஆன்லைன் உணவு ஆர்டருக்கு ஜிஎஸ்டி?
இணையவழி உணவு வழங்கல் சேவைகளுக்கும் விரைவில் சரக்கு சேவை வரி விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
சோமட்டோ, சுவிக்கி உள்ளிட்ட நிறுவனங்களின் செயலி வழியாக உணவு வகைகளை ஆர்டர் செய்வோருக்கும் சரக்கு சேவை வரி விதிப்பது குறித்து வெள்ளியன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
சமையற்கூடங்களில் சமைக்கப்பட்டு வீடுவீடாக உணவு வழங்குவதை உணவகச் சேவையின் கீழ் சேர்க்க ஒரு குழு பரிந்துரைத்தது.
அதில் உணவகங்களில் இருந்து உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு 5 விழுக்காடு, 18 விழுக்காடு என இரு வகைகளில் ஜிஎஸ்டி விதிக்கவும், ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
Comments