சேலம்: கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.. போராட்டத்தில் சாமி வந்து ஆடிய பெண்கள்..!
சேலம் மாவட்டம், வாழப்பாடி கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபோது, பெண்கள் சிலர் சாமி வந்து ஆடினர்.
வி.குமாரபாளையத்திலுள்ள மாரியம்மன் கோவில் பொது வழியை பயன்படுத்துவதில், கடந்த 13 வருடங்களாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவில் திருவிழாவை உடனடியாக நடத்த அனுமதி கேட்டு முற்றுகையிட்டபோது, பெண்கள் சிலர் சாமி ஆடினர்.
இதனிடையே ஒரு மாத காலம் அவகாசம் தாருங்கள், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி திருவிழா நடத்த உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் கூறி போராட்டக்காரர்களை அனுப்பி வைத்தனர்.
Comments