உலக நாடுகளில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் புத்துயிர் பெற்றது ; ஆகஸ்டு மாதத்தில் 22 விமானங்களை விற்றுள்ளது போயிங் நிறுவனம்
உலக நாடுகளில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள நிலையில், போயிங் நிறுவனம் ஆகஸ்டு மாதத்தில் 22 விமானங்களை விற்றுள்ளது.
போயிங் 737 மேக்ஸ் வகையைச் சேர்ந்த 2 விமானங்கள் விபத்துக்குள்ளானது, கொரோனா சூழல் ஆகியவற்றால் முடங்கிய விமான விற்பனை, இந்த ஆண்டில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. போயிங் நிறுவனம் இந்த ஆண்டில் ஆகஸ்டு இறுதி வரை 206 விமானங்களையும், ஆகஸ்டில் மட்டும் 22 விமானங்களையும் விற்றுள்ளது.
ஆகஸ்டில் விற்பனையானதில் 737 மேக்ஸ் வகையைச் சேர்ந்த விமானங்கள் 14, கடல்சார் சுற்றுக் காவல் விமானம் 2 ஆகியன அடங்கும். இந்தியாவில் புதிதாகத் தொடங்கியுள்ள ஆகாசா நிறுவனத்துக்கு 100 விமானங்களை விற்பதற்கான ஆர்டரையும் போயிங் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
போயிங்கின் போட்டியாளரான ஏர்பஸ் நிறுவனம் இந்த ஆண்டில் 384 விமானங்களையும், ஆகஸ்டில் மட்டும் 40 விமானங்களையும் விற்றுள்ளது.
Comments