திருப்பூர் மற்றும் பல்லடத்தில் 14 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

0 1961
திருப்பூர் மற்றும் பல்லடத்தில் இரண்டு பள்ளிகளில் 14 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மற்றும் பல்லடத்தில் இரண்டு பள்ளிகளில் 14 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 220 மாணவ, மாணவிகள், 11ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 8 மாணவர்களுக்கு தொற்று உறுதியானதால் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதே போன்று பல்லடம் அருகே சாமளாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு வாரம் பள்ளி மூடப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments