3000 வீடுகளைக் காலி செய்ய கெடு, தாக்குதல் நடத்தி தாலிபான்கள் அட்டூழியம்... ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டம்

0 6048

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் வீடுகளை தாலிபான்கள் கைப்பற்றியதைக் கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர்.

அந்நகரத்தில் உள்ள ராணுவ காலனியில் குடியிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 3 நாட்களுக்குள் காலி செய்யும்படி தாலிபான் தீவிரவாதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்தக் கெடு முடிவடைந்த நிலையில் கணவனை இழந்த பெண்ணை தாலிபான்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்வை படம் பிடித்து, பெண்ணிடம் பேட்டி எடுத்த செய்தியாளரையும் தாலிபான்கள் தாக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments