அடையாளம் தெரியாத நபர்களிடம், வங்கி வாடிக்கையாளர்கள் சுய விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம் - ரிசர்வ் வங்கி

0 2807

வங்கி கணக்கு விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி, மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்களின் விவரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி  நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறைய புகார்கள் ரிசர்வ் வங்கியிடம் குவிந்துள்ளன.

இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண், இணையதள வங்கிச் சேவை விவரங்கள், கார்டு குறித்த தகவல்கள், பின் நம்பர், ஓடிபி உள்ளிட்ட எந்தத் தகவல்களையும் போன், எஸ்.எம்.எஸ், இமெயில் என, எந்த ஒரு தகவலையும் அடையாளம் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்று, ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments