10 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 10 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டி வீட்டில் தங்கியுள்ள அந்தச் சிறுமி, கடந்த 15 நாட்களுக்கு முன் அங்குள்ள பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பாரதி, பிரபா, கோபி, அருள் ஆகியோர் சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து கலந்த கைக்குட்டையை வைத்து அழுத்தி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியிடம் வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
கூலி வேலைக்காக பெங்களூரு சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்தபோது, அவர்களிடம் சிறுமி கொடுத்த தகவலின்படி போலீசில் புகாரளிக்கப்பட்டு, பாரதி மட்டும் பிடிபட்டுள்ளான். மற்ற மூவரும் தேடப்பட்டு வருகின்றனர்.
Comments