பண மோசடி புகாரில் விஜிபி குழும நிர்வாக இயக்குனர் மீது வழக்குப்பதிவு

0 2879

பிரபல விஜிபி குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாபுதாஸ் மீது பண மோசடி புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ் என்பவர் கொடுத்த புகாரில், விஜிபிக்கு சொந்தமான மூன்று சொத்துகளின் ஆவணங்களை அடிப்படையாக வைத்து பிஎன்பி என்ற நிறுவனம் மூலம் ஒரு கோடியே 80 லட்ச ரூபாயை பாபுதாஸ் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்த பாபுதாஸ், மீதிப் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும், மாறாக அடமானமாக வைத்த சொத்துகளை முறைகேடாக விற்றுவிட்டதாகவும் கிருஷ்ணா ராவ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக பாபுதாஸ் அளித்த பொய்ப் புகாரில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments