ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உள்வட்டாரத்தில் கொரோனா பரவல் ; அதிபர் புதின் முற்றிலும் நலமாக உள்ளதாக தகவல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உள்வட்டாரத்தில் கொரோனா பரவியதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட புதின், பூரண நலத்துடன் இருப்பதாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
அதிபர் புதின் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும், அவர் முற்றிலும் நலமாக உள்ளதாகவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் புதினின் பரிசோதனை முடிவுகள் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
Comments