முறையாக சீரமைக்கவில்லையெனில் பக்கிங்காம் கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டுமே இருக்கும்-உயர்நீதிமன்றம் வேதனை
பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்று புத்தகத்தில் கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டும்தான் இருக்கும் என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கிராமங்களில் குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னையிலுள்ள நீர் நிலைகள் எத்தனை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீர்நிலைகளை அடையாளம் காண திட்டம் துவங்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.
பக்கிங்காம் கால்வாயை ஏன் சீர்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது ஒரு அருமையான, நீர்வழி போக்குவரத்திற்கான கால்வாய் என்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தினர்.
Comments