விவசாய நிலங்களுக்குச் செல்லும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்கம்பிகள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாய நிலங்களுக்குச் செல்லும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் கம்பிகளைத் திருடிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விழுதுப்பட்டு கிராமத்தில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் மும்முனை மின்சார கம்பிகளை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் மின்வாரிய அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் மின் கம்பிகள் திருட்டு என்பது அடிக்கடி நடைபெறுவதாகவும் இதனால் விவசாயப் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதியுறுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Comments