நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஊவே ஹான் பதவியிலிருந்து நீக்கம் - தடகள சம்மேளனம்

0 5936
நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஊவே ஹான் பதவியிலிருந்து நீக்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின், பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. ஈட்டி எறிதல் பயிற்சியாளராக ஜெர்மனியைச் சேர்ந்த ஊவே ஹான்  இந்திய தடகள சம்மேளனத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அவரிடம் பயிற்சி பெற்ற நீரஜ் சோப்ரா நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். இந்நிலையில் தடகள சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு பேசிய அதன் தலைவர் அடிலெ சுமரிவாலா  ஊவே ஹானின் பயிற்சி திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை மாற்றிவிட்டு வெளிநாட்டைச் சேர்ந்த வேறு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments