விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட்-நடிகை கங்கனா ரனாவத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

0 3088

இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில், அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்குப் பிறகு, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தம்மை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கங்கனா ரனாவத் மீது ஜாவித் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான விசாரணை மும்பை மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் வந்த போது கங்கனா தமது திரைப்பட வெளியீடு தொடர்பாக பயணம் செய்ததில் கொரோனா அறிகுறிகளுடன் கூடிய உடல் நலமின்மை ஏற்பட்டுள்ளதால் நேரில் ஆஜராகவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அன்று நேரில் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments