5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் பதிவு கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்
புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் முறையிலான இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. நீதிமன்ற உத்தரவை காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுத்த, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதி அவசியம் எனக் கூறி ஜி.ஐ.சி. எனப்படும் பொதுக்காப்பீட்டு மன்றம் மெமோ தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம், அனைத்து வாகனங்களுக்கும் உடனடியாக பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தும் சூழ்நிலை தற்போதைய நிலையில் இல்லை எனக் குறிப்பிட்டதோடு, அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
அதேசமயம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விபத்துக்கான இழப்பீட்டில் உரிய திருத்தங்களை, மத்திய அரசு கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதி, தமிழக அரசின் போக்குவரத்துதுறை சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையையும் ரத்து செய்தார்.
Comments