அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் திட்டம் ; 51 செயற்கைகோள்களுடன் விண்ணுக்கு செல்கிறது ஃபால்கன் 9 ராக்கெட்
அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் என்றழைக்கப்படும் செயற்கைகோள் அதிவேக பிராட்பேண்ட் இன்டெர்னெட் திட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் சில செயற்கைகோள்களை அந்நிறுவனம் விண்ணுக்கு அனுப்புகிறது.
பூமியைச் சுற்றி தாழ்வான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும் ஆயிரக்கணக்கான செயற்கைகோள்கள், தகவல் பரிமாற்றத்துக்கு தேவைப்படும் நேரத்தை கணிசமாக குறைத்து, இப்போது நிறுவனங்கள் சந்தையில் அளிக்கும் இண்டெர்னெட் வேகத்தை விட பன் மடங்கு அதிக வேகத்தில் சேவை வழங்கும் என்று ஸ்டார்லிங்க் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே ஆயிரத்து 700-க்கும் அதிகமான செயற்கைகோள்களை அந்நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தியுள்ள நிலையில், இப்போது 51 செயற்கைகோள்களை சுமந்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணுக்கு செல்ல உள்ளது.
Comments