உலோக கழிவுகளை பயன்படுத்தி தந்தை-மகன் இணைந்து உருவாக்கிய 14 அடி உயர பிரதமர் மோடியின் சிலை
ஆந்திராவில் தந்தை மகன் இருவரும் சேர்ந்து உலோக கழிவுகளை பயன்படுத்தி பிரதமர் மோடியின் 14 அடி உயர சிலையை உருவாக்கியுள்ளனர்.
குண்டூரை சேர்ந்த சிற்ப கலைஞர் வெங்கடேஷ்வர ராவ், அவரது மகன் ரவி சந்திரா ஆகியோர் இணைந்து ஆட்டோமொபைல் நிறுவனங்களில் இருந்து வீசப்பட்ட பயன்படாத உலோகளையும், உலோக கழிவு விற்கும் சந்தையிலிருந்து பெற்ற உலோகளையும் கொண்டு இந்த சிலையை செய்துள்ளனர்.
ஒரு டன்னுக்கும் அதிகமான உலோக கழிவுகளை பயன்படுத்தி, பத்து பேரைக்கொண்டு, சுமார் 600 மணி நேரத்தில் சிலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments