உருமாறிய கொரோனா பாதிப்பை கண்டறிய மரபணு பகுப்பாய்வு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள, உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசை கண்டறியும் மரபணு ஆய்வகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உருமாறிய கொரோனோ வைரசை கண்டறியும் ஆய்வகங்கள், வெளி மாநிலங்களில் பெங்களூரு, புனேவில் உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே உள்ளன. தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் மாதிரிகளை சோதனை செய்து முடிவுகள் பெறுவதில் காலதாமதமும், அதிக செலவும் ஏற்படுகிறது. இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், 4 கோடி ரூபாய் செலவில், வைரஸ் மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழகத்தின் முதல் வைரஸ் மரபணு பகுப்பாய்வுக் கூடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நிகழ்ச்சியில், 91 பேருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Comments