ஐ-போன் உள்ளிட்ட பொருட்களை பெகசஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் முயற்சி.. ஆப்பிள் பொருட்களுக்கு அவசரகால அப்டேட்

0 3134

ஐ-போன், ஐ-பேட், ஆப்பிள் வாட்ச் அல்லது மேக் கம்ப்யூட்டர்கள் போன்றவை  பெகசஸ் உளவு மென்பொருள் தாக்குதலுக்கு உள்ளாகும் மோசமான ஆபத்தை தடுக்க, ஆப்பிள் நிறுவனம் அவசரகால மென்பொருள் அப்டேட்டை நேற்று வெளியிட்டது.

உலகம் முழுவதும் சுமார் 165 கோடி பேர் ஆப்பிளின் டிஜிட்டல் உபகரணங்களை பயன்படுத்துகின்றனர். இதில் சவூதியை சேர்ந்த ஒருவரின் ஐ-போனில் பெகசஸ் உளவு மென்பொருள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு அப்டேட்டை உருவாக்கும் பணியில் ஆப்பிளின் பாதுகாப்பு குழுவினர் இரவுபகலாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஐபோன் வாடிக்கையாளர்ள் தாங்கள் பெகசஸ் உளவு பார்க்கப்படாமல் இருக்க லேட்டஸ்ட் சாப்ட்வேர் அப்டேட்களான iOS 14.8, MacOS 11.6 , WatchOS 7.6.2.ஆகியவற்றை இன்ஸ்டால் செய்து கொள்ளுமாறு ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments