"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தாலிபன் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் வாங்கித் தர கத்தார் நடவடிக்கை
தாலிபன் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் வாங்கித் தரவும் அவர்களுக்கு அனைத்து உதவிகளை செய்யவும் கத்தார் எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளிகளான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் கவலையை ஏற்படுத்தி உள்ளன.
மத்திய ஆசியாவில் பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கருதப்படும் தாலிபன்களின் ஆட்சிக்கு, பாகிஸ்தானும், துருக்கியும் சட்டபூர்வ அந்தஸ்தை ஏற்படுத்தி தர முயல்வதும் கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், இவை குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் டெல்லியில் விரிவாக ஆலோசிக்க உள்ளார்.
அவர் பிரதமர் மோடியையும் சந்தித்து ஆப்கன் பிரச்சனை பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments