மேற்கு வங்கத்தில் கட்சி மாறி எம்எல்ஏக்களாக உள்ள இருவரை தகுதி நீக்கம் செய்ய அம்மாநில எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கோரிக்கை
மேற்கு வங்கத்தில் கட்சி மாறி எம்எல்ஏக்களாக உள்ள இருவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அம்மாநில எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டசபையில் சபாநாயகர் பீமன் பானர்ஜியிடம் அவர் கடிதம் வழங்கினார். அதில், தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பிஸ்வஜித் தாஸ் மற்றும் தன்மோய் கோஷ் ஆகியோரைப் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் பாஜக சார்பில் வெற்றி பெற்று மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Comments