மேற்கு வங்கத்தில் 130 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்குடன் மருத்துவமனைகளில் அனுமதி

0 2074

மேற்கு வங்கத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்குடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் 130 குழந்தைகள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப் போக்கு அதிகம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழந்தைகளில் இருவரின் உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோயின் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்களின் எச்சரிக்கைக்கு மத்தியில் புதிய நோய் பரவி வருவதாக, மருத்துவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments