முதல் நேரடி குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார், பிரதமர் நரேந்திர மோடி
குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன் விருந்தளிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க இடையிலான முதல் நேரடி குவாட் உச்சி மாநாடு வரும் 24-ஆம் தேதி வாஷிங்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் காணொலி மூலம் மெய்நிகர் கூட்டம் நடந்த நிலையில், தற்போது நேரடி கூட்டத்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
கூட்டத்தில் கொரோனா சூழ்நிலை, பருவநிலை மாற்றம், இந்தோ- பசிபிக் பிராந்திய நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவது, ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments