அண்டை நாடுகளின் எல்லைகளில் பசியும் பட்டினியுமாக காத்திருக்கும் ஆப்கானியர்கள்..!
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளின் எல்லைகளில் காத்திருப்பது தெரியவந்துள்ளது.
தாலிபான் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் காபூல் விமானநிலையத்தில் இருப்பவர்கள் குறித்தே செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பாகிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானுடனான எல்லைகள் வழியாக வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கும் செயற்கைக் கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.
தாலிபான்களும் கண்டுகொள்ளாத நிலையில், சம்பந்தப்பட்ட நாடுகளும் கைவிட்டதால் எல்லைகளில் ஆப்கானியர்கள் பசியும், பட்டினியுமாக வாழ்வைக் கழித்து வருகின்றனர்.
Comments