மகள் பிறந்த மகிழ்ச்சி... வாடிக்கையாளர் அனைவருக்கும் சுமார் 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பானி பூரியை இலவசமாக வழங்கி கொண்டாடிய தந்தை..!
போபாலில், சாலையோர கடை நடத்தும் இளைஞர், தனது மகளின் பிறப்பை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர் அனைவருக்கும் சுமார் 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பானி-பூரிகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
மகள் பிறந்த மகிழ்ச்சியை விட வேறு எதுவும் தனக்கு தேவையில்லை என்றும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பை கண்டதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஏராளமானோர் அங்கு குவிந்து பானி பூரியை வாங்கி ருசித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Comments