பஞ்சாப் ஆளுநராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர், அமைச்சர்கள் சந்தித்து வாழ்த்து
பஞ்சாப் ஆளுநராக செவ்வாய்கிழமை பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசினர்.
தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
செவ்வாய்கிழமை காலை 8.30மணி அளவில் சென்னையில் இருந்து அவர் பஞ்சாப் புறப்படுகிறார்.
இந்த நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.
தமிழக புதிய ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள ஆர்.என்.ரவி வரும் 16ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments