தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு - நீதிபதிகள்

0 2580

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையின் போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், கூடுதல் இழப்பீடு வழங்கவும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைக் கைவிடவும் தமிழகத் தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments