9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்... செப்டம்பர் 15 வேட்பு மனு... அக். 6, 9 வாக்குப்பதிவு

0 7103

மிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 15ஆம் நாள் தொடங்கும் என்றும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார்.

ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்குக் கட்சி அடிப்படையில் இல்லாமலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்குக் கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறும்.

அக்டோபர் 6ஆம் நாள் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 9ஆம் நாள் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments