ஓலா மின்சார ஸ்கூட்டர் ஆலையில் 10,000 பெண்களுக்கு பணி வாய்ப்பு - ஓலா சிஇஓ
ஓசூர் அருகே அமைந்துள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் 10 ஆயிரம் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
முழுக்க முழுக்க பெண்களே பணியாற்றும் உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு தொழிற்சாலையாகவும் ஓலா ஃபியூச்சர்பேக்டரி அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொழிற்சாலையில் பணியாற்ற உள்ள முதல் பெண்கள் குழுவை வரவேற்ற காட்சிகளையும் ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும், தற்சார்பு இந்தியாவுக்கு, பொருளாதாரத் தற்சார்பு கொண்ட பெண்கள் தேவை என்றும் பவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.
Comments