கோவில் நில ஆக்கிரமிப்பாளரைக் கைது செய்யச் சட்டத் திருத்த முன்வரைவு, அமைச்சர் சேகர்பாபு தாக்கல்
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்போரைக் கைது செய்ய வழிவகை செய்யும் சட்டத் திருத்த முன்வரைவைச் சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்தார்.
சட்டத் திருத்தத்துக்கான நோக்கக் காரண விளக்கவுரையில், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருவதால் அதைத் தடுக்க இந்து அறநிலைக் கொடைகள் சட்டத்தைத் திருத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி கோவில் நிலங்களை ஆக்கிரமிப்போர் கடுமையான குற்றம் செய்தவராகக் கருதப்படுவர். அத்தகையோரை ஜாமீனில் விட முடியாத வகையில் கைது செய்வதற்குச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Comments