மினி வேனில் ஏற்றி வந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறி சுக்குநூறாக நொறுங்கிய வாகனம்
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மினி வேனில் ஏற்றி வரப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறி வாகனம் சுக்குநூறாக நொறுங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிழக்கு கோதாவரி மாவட்டம் அனபர்தியில் இருந்து மந்தப்பாடு வழியாக கடந்த 7 ம் தேதி மினி வேன் ஒன்று ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஆக்சிஜன் சிலிண்டரில் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் வாகனத்தின் பின் பகுதி சுக்குநூறாக உடைந்து மற்ற சிலிண்டர்கள் சாலையில் உருண்டு ஓடின.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரும் உடன் வந்தவரும் காயங்களின்றி தப்பிய நிலையில், பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
விபத்து தொடர்பாக வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டர்களை இடம் மாற்றும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகளை மீறுவது, அதன் வால்வு பகுதியில் கிரீஸ் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது, அதிகமான அதிர்வுகளை கொடுப்பது உள்ளிட்ட காரணங்களால் அது வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Comments