நீதிமன்றத்தின் சுவர் ஏறி குதித்து தப்பியோடிய கைதி; 2மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்

0 3060

காஞ்சிபுரத்தில் நீதிமன்றத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிய கைதியை 2மணி நேரத்திற்குள் போலீசார் மடக்கி பிடித்தனர்.

பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவன் அடிதடி, பைக் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவன் எனக் கூறப்படுகிறது.

வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பத்மநாபனை போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது, போலீசாரை ஏமாற்றிவிட்டு சுவர் ஏறி குதித்து பத்மநாபன் தப்பியோடிவிட்டான். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார், கைதியை துரத்தி பிடிக்க முயன்றும் பிடிக்கமுடியவில்லை.

உடனடியாக அனைத்து சோதனை சாவடிகளும் உஷார்படுத்தப்பட்ட நிலையில், தப்பியோடிய கைதி பத்மநாபனை காந்தி சாலை பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments