பெகாசஸ் விவகாரம் : உறுதி மொழிப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குகளில், வெளிப்படையான உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்த விவகாரம் குறித்த அரசின் அறிக்கையை தாக்கல் செய்து, அது பொது விவாதத்திற்கு வந்து விட்டால், அது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் என இன்று நடந்த விசாரணையில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
உளவுப் பணிகளுக்கு எந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை தீவிரவாதிகள் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படும் என அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற வாதத்தை ஏற்பதாக கூறிய அவர்கள், ஆனால் தனிப்பட்டவர்களின் போன்கள் உளவு பார்க்கப்பட்டது குறித்த புகாருக்கு அரசின் பதில் என்ன என நீதிபதிகள் வினவினர்.
தங்களது தனிநபர் உரிமை மீறப்பட்டுள்ளதாக வந்துள்ள புகார்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அவ்வாறு செயல்பட எந்த அரசு அமைப்புக்கு அதிகாரம் உள்ளது எனவும் கேட்டனர்.
Comments