பொதுமக்களுக்கான முதல், விண்வெளி சுற்றுலா செல்லும் 4 பேரின் விவரங்கள் வெளியீடு

0 3542

அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவத்தின் முழுக்க முழுக்க பொதுமக்களுக்கான விண்வெளி சுற்றுலா திட்டத்தில் பயணம் மேற்கொள்ளும் 4 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

3 நாள் பயணமாக புதன்கிழமை  ஃபேல்கன் 9 விண்கலம் மூலம் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணுக்கு செல்லும் இந்த குழுவின் தலைவராக Shift4Payments ஈ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவர்  Jared Isaacman இருப்பார். 

இவர், Draken International என்ற நிறுவனம் மூலம் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு விமான பைலட் பயிற்சி அளித்து வருகிறார். இவருடன் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த Hayley Arceneaux என்ற பெண்மணியும், புவி அறிவியல் பேராசிரியரான Sian Proctor என்ற பெண்மணியும் செல்கின்றனர்.

அமெரிக்க முன்னாள் விமானப்படை வீரரரான Chris Sembroski-யும் செல்கிறார். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பின் ProSpace என்னும் அமைப்புடன் இணைந்து விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் இடம்பெற அமெரிக்க அரசை வலியுறுத்தி வந்துள்ளார்.

அதனாலேயே ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் உருவானதாக கருதப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments