காவல்துறை, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொதுமக்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்கச் சென்னை காவல் துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவு தொடங்கப்படும்.
காவல் துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு சென்னையில் 100 பள்ளிகளில் ஏற்படுத்தப்படும்.
சென்னையில் கூட்டமான இடங்களையும் நீண்ட தூரச் சாலைகளையும் கண்காணிக்க 3 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவர், இதற்காக மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
கடலோரப் பாதுகாப்புக் காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய ஆயிரம் மீனவ இளைஞர்கள் ஊர்காவல் படையினராகப் பணியமர்த்தப்படுவர். காவல் ஆணையம் மீண்டும் அமைக்கப்படும்
காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையைக் காட்டிப் பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்கலாம்.
இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும். அலுவல் நிமித்தம் சென்னைக்கு வரும் காவலர்கள் தங்குவதற்குக் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் காவலர்கள் தங்குமிடம் கட்டப்படும்.
Comments