அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 3507

ரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட 14 அறிவிப்புகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

100% தமிழ் இளைஞர்களை நியமனம் செய்யும் பொருட்டு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழிப் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும், கொரனோ தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் தாமதமானதால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 வருவாய் மாவட்டங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்துதல், முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா மேலாண்மை நிலையத்திற்கு பல்வேறு வசதிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments