சென்னை மதுரவாயல், வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50சதவீத கட்டணம் மட்டுமே வசூல்... உயர்நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

0 2503

சென்னை மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில்  உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி வசூலிக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில்  சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும், வழக்கை  விசாரித்து முடிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில்  வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மாத இறுதியில் வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments