அடுத்த ஆண்டில் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மீண்டும் இயங்கத் துவங்கும் என தகவல்
வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் இயங்கத் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தாங்க முடியாத கடன் சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் கடந்த 2019 ஏப்ரலில் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. அதைத் தொடர்ந்து அதை மீண்டும் இயக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஜலான் கால்ரோக் என்ற கூட்டமைப்பு அதை ஏற்று நடத்த முன்வந்தது. ஜெட்ஏர்வேசுக்கு கடன் வழங்கிய நிறுவனங்களும் , தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயமும் அதை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அடுத்த நிதியாண்டில், ஏப்ரல்-ஜூன் மாத வாக்கில் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மீண்டும் உள்நாட்டு சேவைகளை துவக்கும்.
முதலில் உள்நாட்டு விமான சேவைகளை துவக்கிய பிறகு ஆண்டின் இறுதி வாக்கில் குறுகிய தூர பன்னாட்டு சேவைகளை துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமானப் போக்குவரத்து வரலாற்றில் முதன் முறையாக, 2 ஆண்டுகளுக்கும் அதிகமாக முடங்கி இருந்த ஒரு விமான நிறுவனம் மீண்டும் உயிர்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments