தனது மகளுக்கு ஊக்கம் அளிக்க, 47 வயதில் நீட் தேர்வு எழுதிய தந்தை : படிப்பிற்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்த ஜிம் உரிமையாளர்

0 2597

சென்னையில், 47 வயது நபர் ஒருவர் தனது மகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், வடபழனியைச் சேர்ந்த 47வயதான மோகன் என்பவர் அண்ணாநகரிலுள்ள மையத்தில் தேர்வெழுதினார்.

உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் மோகன், 30 ஆண்டுகளுக்கு முன் 12-ம் வகுப்பு முடித்த போது மருத்துவப் படிப்பில் சேர முயன்றுள்ளார்.

அப்போது சேர முடியாமல் போகவே, தற்போது தனது மகள் மற்றும் தங்கையின் மகளுக்கு பயிற்சி அளித்து வருவதின் மூலம் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக நீட் தேர்வு எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அடிப்படையில், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வெழுத தேசிய தேர்வு முகமை அனுமதிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments