தாலிபன் அரசு அமைந்தபிறகு, உலக நாடுகளில் முதன்முதலாக கத்தார் - ஆப்கனுடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை

0 2392

தாலிபன் அரசு அமைந்தபிறகு, உலக நாடுகளில் முதன்முதலாக கத்தார்  ஆப்கனுடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

இதற்காக, கத்தாரின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகம்மது பில் அப்துல் ரகுமான் அல் தானி தமது குழுவினருடன் காபூல் வந்தார். பிரதமர் முல்லா ஹசன் அகுந்துடன் பேச்சுவார்த்தை நடத்திய கத்தார் அமைச்சர், இருதரப்பு உறவுகள், மனிதாபிமான உதவிகள்,பொருளாதார வளர்ச்சி,  உள்ளிட்டவை குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு கத்தார் அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.  ஆப்கனில் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாத அமைப்புகளை அழிக்கும் முயற்சிகள் குறித்தும் அவர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாலிபன்களிடம் நெருக்கமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கும் கத்தார் ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments