பாகிஸ்தானில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழப்பு எனத் தகவல்
பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
கைபர் பக்துங்வா மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தோர்ஹர். இங்கு கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின்னல் தாக்கியதில் தோர்ஹர் கிராமத்தில் 14 பேர் மரணமடைந்ததாக கைபர் மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இவர்களில் 5 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் அடங்குவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments