அமெரிக்க, ஆப்கானியப் படையினரை ஏமாற்றிவிட்டுத் தனது திட்டங்களைச் செயல்படுத்தினேன் ; தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித்

0 2912
அமெரிக்க, ஆப்கானியப் படையினரை ஏமாற்றிவிட்டுத் தனது திட்டங்களைச் செயல்படுத்தினேன்

காபூலிலேயே இருந்துகொண்டு அமெரிக்க, ஆப்கானியப் படையினரை ஏமாற்றிவிட்டுத் தனது திட்டங்களைச் செயல்படுத்தியதாகத் தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஊடகத்துக்குப் பேட்டியளித்த அவர், ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய பின்னும் சபியுல்லா என்கிற ஒருவர் இல்லை என்றும், அது கற்பனையான பெயர் என்றும் ஊடகத் துறையினர் கருதியதாகத் தெரிவித்தார். இதேபோல் அமெரிக்க ஆப்கானிய படையினரும் கருதியதால்தான் அவர்களிடம் இருந்து பலமுறை தான் தப்பியதுடன் திட்டங்களைச் செயல்படுத்த முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, ஆப்கானிய படையினர் தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டபோதும் தான் ஒருபோதும் நாட்டைவிட்டு வெளியேறியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கப் படையினர் உள்ளூர் மக்களுக்குப் பணம் கொடுத்துத் தன்னுடைய இருப்பிடத்தைக் கேட்டறிந்தபோதும் அவர்களின் பிடியில் சிக்காமல் தான் தப்பியதாகக் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments