பள்ளி ஆசிரியரைக் கடத்தி, ரூ. 4.50 லட்சம் பணம் பறித்த வழக்கு ; எஸ்.ஐ உட்பட 6 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

0 5387
எஸ்.ஐ உட்பட 6 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

பள்ளி ஆசிரியரைக் கடத்தி நான்கரை லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் சென்னை வளசரவாக்கம் பெண் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி மாவட்டம் குப்பாபுரத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் சாலமோன் என்பவரை கடத்திச் சென்று, அவரது சகோதரரின் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வழக்கு போடுவோம் என மிரட்டி, நான்கரை லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் கண்ணன் உட்பட 6 காவலர்கள் மீது சாலமோன் தரப்பில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஆள் கடத்தல், ஆபாசவார்த்தைளால் திட்டுதல், கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments