செவன் ஸ்டார் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் ; உணவு பாதுகாப்பில் மெத்தனம் காட்டிய 12 இறைச்சி கடைகளுக்கு அபராதம்

0 8936
உணவு பாதுகாப்பில் மெத்தனம் காட்டிய 12 இறைச்சி கடைகளுக்கு அபராதம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பில் மெத்தனம் காட்டிய 12 இறைச்சி கடைகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஆரணியில் உள்ள செவன் ஸ்டார் பிரியாணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில், ஓட்டலில் சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுபோக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக ஆரணியில் உள்ள இறைச்சி மற்றும் முட்டை விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அழுகிபோன 150 முட்டைகள் மற்றும் இருப்பு வைத்திருந்த 6 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும்  நகராட்சி அலுவலகத்தில் உணவக உரிமையாளர்களுடனான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தரமற்ற உணவு குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கும் வகையில் அணைத்து ஹோட்டலிலும் 9444042322 என்ற இலவச எண் அடங்கிய உணவு பாதுகாப்பு துறையின் நோட்டீஸை ஒட்டிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments