காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம்

0 3474

சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் நிர்வாகி ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது.

வெள்ளக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கட்சியிம் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவியிலுள்ள பாண்டிவேலு என்பவர், கட்சி கூட்டத்திற்கு நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு வருவதில்லை, பூத் கமிட்டி அமைக்கப்பட்டதில் குளறுபடிகள் இருப்பதாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

அப்போது குறுக்கிட்ட ப.சிதம்பரம், பாண்டிவேலுவின் பேச்சை நிறுத்த முயன்றார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments