ஐ போன் திறந்தால் பிராங்க் பாஸ் உள்ளே போய்விடுவாராம் ..! டூயட் ஸ்டில்ஸ் அவுட்..!

0 7616
ஐ போன் திறந்தால் பிராங்க் பாஸ் உள்ளே போய்விடுவாராம் ..! டூயட் ஸ்டில்ஸ் அவுட்..!

திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பிராங்க் பாஸ் யூடியூப்பருடனான காதல் குறித்து மாணவியின் தோழி ஒருவர் பேசியுள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. பாஸ்வேர்டு தெரியாததால் மாணவியின் ஐ போன் சென்னை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தனரகஷ்னா என்பவர் தனது கை நரம்பை அறுத்துக் கொண்டும், தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நவல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தங்கள் மகளின் தற்கொலைக்கு அவரை காதலித்து வந்த பிராங் பாஸ் யூடியூப்பர் சூர்யாவின் தொல்லையே காரணம் என்றும் , சென்னையில் வைத்து மாணவி தனரக் ஷனாவை , யூடியூப்பர் சூர்யாவும் அவனது தாயும் அடித்து விரட்டியதால் தனரக்சனா உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தனர். தனரக்சனா பயன்படுத்தி வந்த ஐபோனையும் போலீசில் ஒப்படைத்திருந்தனர்.

பாஸ்வேர்டு தெரியாததால் தனரக் ஷனாவின் ஐ போனை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது இதையடுத்து அந்த பெண்ணின் தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களிடம் விசாரித்த போது பிராங்க் பாஸ் சூர்யாவுக்கும் , தனரக் ஷனாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்தனர். சூர்யாவுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் போது எடுத்த புகைபடங்களை கல்லூரி தோழர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.

தோழி ஒருவர் கூறும் போது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த போது தனரக் ஷனாவை சூர்யா சந்தித்ததாகவும், பின்னர் பலமுறை தொடர்பு கொண்டு, காதலிப்பதாக கூறி வற்புறுத்தி சம்மதிக்க வைத்ததாக தெரிவித்த அந்த தோழி ஆரம்பத்தில் பிராங்க் பாஸ் சூர்யா , தனரக் ஷனா காதலிக்க மறுத்ததால் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார்

ஆனால் தனரக் ஷனா படித்த கல்லூரி நிர்வாகத்தினர் , சூர்யாவை தாங்கள் கல்லூரியின் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட மாணவி கூட இந்த ஆண்டு சரியாக கல்லூரிக்கு வந்ததில்லை என்றும் மறுத்துள்ளனர். இதனால் தனரக் ஷனாவின் ஐ போனை திறந்தால் மட்டுமே சூர்யாவுடனான தொடர்பு மற்றும் சென்னையில் நடந்த சம்பவம் தொடர்பான உண்மை நிலவரம் தெரியவரும் என்று தெரிவித்த காவல் துறையினர் தடயவியல் பரிசோதனைக்காகவும் பாஸ்வேர்டு இல்லாமல் அதனை திறப்பதற்காகவும் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தெரிவித்தனர். ஐ போன் திறந்தவுடன் , அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பிராங்க் பாஸ் யூடியூப்பரை பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments