குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் தேர்வு

0 3095
குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் தேர்வு

முதன்முறை சட்டமன்ற உறுப்பினரான பூபேந்திர பட்டேல் குஜராத்தின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குஜராத் முதலமைச்சர் பதவியில் இருந்து விஜய் ரூபானி நேற்று விலகினார்.

இதனால் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் காந்திநகரில் நடைபெற்றது. இதில் மேலிடப் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோசி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக பூபேந்திர பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்த விஜய் ரூபானி அவருக்குப் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

புதிய முதலமைச்சராகும் பூபேந்திர பட்டேல் 2017 சட்டமன்றத் தேர்தலில் காட்லோடியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட ஒரு இலட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments